Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : கீழடியும் சங்ககால தமிழர்களின் நகர நாகரிகமும்
Article Information : Volume2 - Issue1 (June - 2018) , 63-69
Affiliation(s) : Social ACtivist

Abstract :

தமிழர்களின் பெருமையே பழமையான தமிழ்மொழியும், நாகரிகமான வாழ்க்கை முறையும்தான். வெண்பாமாலை நூலில் வரும் "கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி" என்று நாம் பெருமை பேசினாலும் அந்த பெருமைக்கான சான்றுகள் எல்லாமே சங்க நூல்களில் மட்டுமே உள்ளது. தமிழர்களின் நாகரிகம் எப்படி இருந்தது என்பதற்கான சான்றுகள் பாகிசுதான் நாட்டில் பஞ்சாப் மாநிலத்திலுள்ள இரவி நதிக்கரையிலுள்ள அரப்பாவிலும், அங்கிருந்து 400கிமீ தொலைவில் சிந்து நதிக்கரையிலுள்ள மொகஞ்சதாரோ என்ற இடத்திலும், முப்பதாயிரம் மக்கள் வாழ்ந்ததற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கொண்ட ஊர்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்த நிலையில் கடந்த நூற்றாண்டில் நமக்கு கிடைத்துள்ளன. அதற்கு வலுசேர்க்கும் விதமாக திரு ஆர். பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. அவர்களின் சிந்துவெளியில் அமைந்துள்ள ஊர்கள், மலைகளின் பெயர்கள், சங்க தமிழ் இலக்கியங்களிலுள்ள பெயர்களை இன்றளவும் தாங்கி நிற்கிறது என்ற அவரின் ஆய்வும் வலுசேர்க்கிறது.


Keywords : தொல்லியல்
Document Type : Research Paper
Publication date : June 02, 2020