Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : நாட்டார் தெய்வ வழிபாட்டில் திருப்பத்தூர் வட்டார நடுகற்கள்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 48-54
Affiliation(s) : SHC TPT

Abstract :

ஈராயிரம் ஆண்டுகள் பழமையுடைய தமிழ்ப் பண்பாட்டில் தெய்வ நம்பிக்கை என்பதும் ஒன்று. தொடக்க நிலையில் இயற்கை மற்றும் அச்சம் தருவனவற்றை வணங்கிய தமிழர் காலப் போக்கில் தம்மோடு வாழ்ந்து, தமக்காக உயிர் நீத்தவர்களை வணங்கத் தலைப்பட்டனர். தம்மோடு வாழ்ந்து மறைந்த மனிதர்களைக் கல்வட்டங்கள், கற்திட்டைகள், தாழிகள் மூலம் அடக்கம் செய்து, பிறகு அவர்கள் இறந்த இடத்தில் உயார்ந்த குத்துக்கற்களை நட்டு வழிபட்டனர். கால வளர்நிலை மாற்றத்தில் குத்துக்கற்கள் நடுகற்களாக மாறி இறந்த வீரனின் உருவம், எதற்காக இறந்தான்? என்பதை வெளிப்படுத்தும் கல்வெட்டுகள் ஆகியவற்றைக் கொண்டு இறந்த வீரனைச் சிறப்புச் செய்தனர். அதற்கும் ஒருபடி மேல் சென்று இறந்த வீரனைத் தெய்வமாக்கி வணங்கினர். இத்தகு சிறப்புக் கொண்ட இவ்வாய்வுக் கட்டுரை திருப்பத்தூர் வட்டாரத்தில் காணலாகும் நடுகற்களைப் பாடுபொருளாகக் கொண்டு அமைகிறது.


Keywords :
Document Type : Research Paper
Publication date : December 19, 2017