Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : பதினெண் கீழ்க்கணக்கு அகப்பாடல்களில் இடம்பெற்றுள்ள மனிதர்களின் ஒப்பீட்டுச் சிந்தனை பகுப்பாய்வு - முனைவர் ஆ.சந்திரன்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 1-8
Affiliation(s) : SHC TPT

Abstract :

ஒரு பொருளை இன்னொறு பொருளுடன் ஒப்பிட்டு பார்த்தல் என்பது மனித இயல்பு. இந்த ஒப்பீட்டு குணத்தை அவர்கள் இயல்பாகவே பெற்றுள்ளனர். மனதின் வெளிப்பாடாய் அமையும் இது மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. ஏழையின் சிரிப்பில் சிலருக்கு இறைவன் காட்சியளிக்கிறான். பெண்ணின் முகம் சிலருக்கு அழகிய நிலவாய்த் தெரிகிறது. ஒருத்தருக்கு முழுநிலவின் அழகு, இருள் கவ்விய குடிசையில் பசியாற கூழ் தேடும் உழைப்பாளி சுடுசோறு நிறைந்த சட்டியின் மூடியைத் திறந்து பார்க்கும்போது அடையும் மகிழ்ச்சியை உணர்த்துகிறது. ஆறும் மலையும் ஒருத்தருக்கு பெண்ணின் அங்கங்களாய்க் காட்சியளிக்கிறதென்றால், இன்னொருத்தருக்குத் தடாகமும் இளநீரும் அந்தக் காட்சியைப் புலப்படுத்துகிறன. இவ்வாறு மன உணர்வு மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. இத்தகைய மன உணர்வு காலம் தோறும் எவ்வாறெல்லாம் மற்றமடைந்து வந்துள்ளது என்பதை பற்றி முழுமையாக ஆராய்ந்தால் தமிழனின் சிந்தனை காலந்தோறும் எவ்வாறெல்லாம் மாற்றமடைந்து வந்துள்ளது என்பதை அறியமுடியும். அத்தகைய ஒரு முயற்சியின் முன்னோட்டமாக இக்கட்டுரை அமையும் என நம்புகிறேன்.


Keywords : சங்கம் மருவிய கால இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : December 19, 2017