Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : பௌராவின் வீரநிலைக் கோட்பாட்டு அடிப்படையில் தமிழ்க் கதைப்பாடல்களில் வெளிப்படும் பெண்களின் வீரம்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 75 - 83
Affiliation(s) : SHC TPT

Abstract :

மனித சமூகத்தில் வீரத்திற்கெனத் தனித்த இடம் தரப்படுகின்றது. தொடக்க காலச் சமூகத்தில் வீரமுடையோரே மக்களை வழிநடத்தினர். இதனைக் கருத்தில் கொண்டே ஒரு சமூகத்தின் கலாச்சாரம் பற்றிய ஆய்விற்கு வீரனைப் பற்றிய ஆய்வு தேவை என ஸ்டூவர்ட் பிளாக்பென் கூறுகின்றார்1. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னைத் துணைவேந்தரும் ஒப்பிலக்கிய ஆய்வாளருமான சி.எம்.பௌரா கிரேக்கக் கவி ஹோமரின் காவியங்களான இலியட், ஒடிசியினை ஆய்விற்கு உட்படுத்தும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டார். அச்சிக்கல்களுக்கான விடையை உலகின் பல்வேறு பகுதிகளிலும் வழங்கிவரக் கூடிய வீரநிலை இலக்கியங்களை ஒப்பிட்டு ஆய்வதன் வழிக் கண்டுணரலாம் என்ற முடிவிற்கு வந்தார். அதன்படி ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களிலுள்ள சுமார் 30 நாடுகளின் வீரநிலை இலக்கியங்களை ஆய்விற்கு உட்படுத்தி வீரநிலைக் கவிதையின் பல்வேறு நிலைகளை விளங்கிக் கொண்டார். அந்த ஆய்வின் கருத்துக்களைத் தனது வீரநிலைக் கவிதை (Heroic Poetry) என்ற நூலில் விரிவாகவும் தெளிவாகவும் முன்வைத்துள்ளார்.


Keywords :
Document Type : Research Paper
Publication date : December 19, 2017