Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : ‘அடங்க மறுத்த தமிழ்க்குடிகள்’ (மகள் மறுத்தல்)
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 9-20
Affiliation(s) : SHC TPT

Abstract :

‘தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப பூர்வீகத் தமிழ்க்குடிகள் தன்மான உணர்வுடன் கோலோச்சி வாழ்ந்த வரலாறு நாம் அறிந்த ஒன்றுதான். பொதுவாகச் சங்க இலக்கியங்களை நோக்குங்கால், சீறூர் மன்னர் பெருவேந்தர் என இரண்டு ஆளுமைகள் மக்களை வழிநடத்தியதைக் காண்கின்றோம். இவ்விரு ஆளுமைகளுக்கும் எண்ணற்ற வேறுபாடுகள் இருப்பதும் அவரவர் செயல்களைக் கொண்டு அறியமுடிகின்றது. சேர, சோழ, பாண்டியர் எனும் மூவேந்தர்களது படைபலம், அரசியல், கொடை, ஆட்சிப்பரவல் குறித்துப் பரவலாக அனைவரும் அறிவர். இவர்களன்றி இம்மண்ணில் சீறூர் மன்னர் என்ற அடையாளத்துடன் தத்தம் குடிகளை வழிநடத்திய ஒரு கூட்டமும் இருந்துள்ளது. இவர்களது பண்புகள் வேந்தர்களை விடப் பலமடங்கு உயர்ந்து விளங்கியதாகச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன. அவ்வகையில் வேந்தர்கள் - சீறூர் மன்னர்களிடையே நிலவிய பண்பாட்டு அரசியலை விளக்கிட முற்படுகிறது இக்கட்டுரை.


Keywords : சங்க இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : December 19, 2017