புதிய அவையம்
ISSN : 2456-821X
ஆசிரியரின் அறிவுறுத்தல்
கட்டுரை மதிப்பீடு
- ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் மதிப்பீட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர்களின் பார்வைக்கு உட்பட்டு மதிப்பீடு செய்யப்படும்.
- தரமான, சிறந்த கட்டுரைகள் மதிப்பீட்டுக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்டு, அவை மட்டுமே வெளியிடப்படும்.
மதிப்பீட்டுக்குழு வல்லுநர்கள்
முனைவர் பா. ஆனந்தகுமார்,
பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
|
முனைவர் சு.சதாசிவம்,
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
|
முனைவர் ஆ. ஜோசப் சார்லி ஆரோக்கியதாஸ்,
தமிழ்த்துறைத் தலைவர்,
|
முனைவர் ஆ.மரிய தனபால்
உதவிப் பேராசியர், தமிழாய்வுத்துறை,
|
முனைவர் ஞா. பெஸ்கி,
இணைப் பேராசியர் & துறைத்தலைவர்,
|
முனைவர் N. குமாரி,
உதவிப் பேராசியர் & துறைத்தலைவர்,
|
இதழின்நோக்கங்கள்
தமிழாய்வுப் பரப்பில் புதிய சிந்தனை, புதிய பொருண்மை, புதிய செய்தி என்கிற அடிப்படையில் ஆய்வுகளை வெளிக்கொணர்வதே இவ்இதழின் நோக்கமாகும்.
கட்டுரையாளர்களுக்கான வழிகாட்டுதல்கள்
ஆராய்ச்சிக் கட்டுரையின் அமைப்பு
உள்ளடக்கம்
- தலைப்பு
- கட்டுரையாளரின் பெயர், தகுதிகள், மின்னஞ்சல், தொடர்பு எண்
- தொடர்புமுகவரி
- ஆய்வுச் சுருக்கம்
- முன்னுரை்
- ஆய்வு நெறிமுறைகள்
- முடிவுகள்
- இணைப்புகள் (இருப்பின்)
- மேற்கோள்கள்
தலைப்பு
- தலைப்பு தெளிவாகவும் விளக்கமாகவும் பொருண்மை விவாத அடிப்படையிலும் அமைதல் வேண்டும்.
- தலைப்பு 14 (Font size) எழுத்தளவில், தடித்த (Bold) எழுத்துருவில் இருத்தல் அவசியம்.
- தலைப்பு வெளிப்படையாக அமைதல் வேண்டும், சுருக்கக் குறியீடுகள் ஏனைய குறியீடுகள் போன்றவை பயன்படுத்தக்கூடாது.
கட்டுரையாளர்
- ஆய்வுச் சுருக்கம் சமர்ப்பிக்கையில் ஒவ்வொரு கட்டுரையாளரும் தமது பெயர், முதலெழுத்து (Initial) தகுதிகள், முழுமையான முகவரி, தாம் சார்ந்துள்ள நிறுவனம் குறித்த தகவல்களைக் குறிப்பிட வேண்டும்.
- ஆய்வுச் சுருக்கத்தில் இடம் பெறும் தகவலின் அடிப்படையில் முழுக்கட்டுரையினையும் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முழுப் பொறுப்பும் அக்கட்டுரையாளரே ஆவார்.
ஆய்வுச் சுருக்கம்
- ஆய்வுச் சுருக்கம் 250 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒரே பத்தியாக (Paragraph) இருத்தல் நலம். ஆய்வுச் சுருக்கம் கட்டுரையாளரின் தலைப்பிற்குள் அவரது சொந்தக் கருத்துக்களைத் தாங்கியதாக இருத்தல் வேண்டும். மேற்கோள்கள் இங்கு கட்டாயம் இடம் பெறக்கூடாது.
- முன்னுரை - கட்டுரையின் சிக்கல்களை முன்வைத்து தெளிவாக அமைத்தல் வேண்டும். தலைப்பின் பின்னணி, ஆய்வுக் கருதுகோள் ஆகியவற்றைத் தெளிவாக வலியுறுத்தல் வேண்டும். கட்டுரையின் உட்கருத்தை விவரிப்பதாகவும் தெளிவாகவும் முன்னுரை அமைய வேண்டும்.
ஆய்வு நெறிமுறைகள்
- கட்டுரையில் பின்பற்றப்படும் ஆய்வு நெறிமுறைகளை கட்டாயம் விவரிக்க வேண்டும்.
- நெறிமுறைகள் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்களும் இடம் பெற வேண்டும்.
முடிவுகள்
- தேர்ந்து கொண்ட கருதுகோளினைப் பயன்படுத்தி, நிறுவி ஆய்வு முடிவுகளை எடுத்துரைக்க வேண்டும்.
- சுருக்கமாகவும், தெளிவாகவும் முடிவுரை அமைய வேண்டும்.
பிண்ணிணைப்புகள்
- நிழற்படங்கள்
- வரைபடங்கள்
- அட்டவணைகள்
- புள்ளி விபரங்கள்
- மேலும்…
மேற்கோள்கள்
- ஆய்வுக் கட்டுரையில் பயன்படுத்திய சான்றெண்களுக்கு ஏற்ற விளக்கங்களையும், பயன்படுத்திய மேற்கோள்களுக்கான விளக்கங்களையும் அதற்குரிய நூலாசிரியர்கள், நூல்களின் பெயர் போன்ற விபரங்களை மிகச் சரியாக எடுத்துரைக்க வேண்டும்.
- பயன்பட்ட அகராதிகள், இதழ்கள், கலைக் களஞ்சியங்கள் குறித்த விளக்கங்களைப் பதிப்பு, ஆண்டு போன்றவற்றைத் தெளிவுறக் குறிப்பிட வேண்டும்.
- பயன்பட்ட இணையதளங்கள், தரவுத்தளங்கள், வலைப்பக்கங்கள் தொடர்பான முகவரிகளை மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டும்.
இறுதிக்கட்டுரை
- கட்டுரை 6 பக்கங்களுக்குக் குறையாமலும் 8 பக்கங்களுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.(ஆய்வுத் தேவை கருதி பக்கங்கள் மிகுந்தால் நலம்) ஒருங்குறி (UNICODE - vijaya) எழுத்துருவில் மட்டுமே தட்டச்சு செய்ய வேண்டும்.
- பிழைத் திருத்தம் இன்றி கட்டுரையினை வடிவமைக்கவும்.
- கூடுமான வரையிலும் இதுவரை பிறரால் சிந்திக்கப்படாத, காலத்திற் கேற்ற பொருண்மைகளில் சுயமான முடிவுகளை வெளிப்படுத்தக் கூடியதாகக் கட்டுரை அமைதல் வேண்டும்.
- குறித்த தேதிக்குள் கட்டுரையினைப் பதிவேற்றம் (Upload) செய்திடல் வேண்டும்.
- கட்டுரைகள் வல்லுனர் குழுவின் (Editorial Board) பரிந்துரைக்குப் பின்னரே ஏற்றுக் கொள்ளப்படும்.
- தாமதமாக வரும் கட்டுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
கட்டுரையாளர்கள் கவனத்திற்கு
- கருத்துத் திருட்டு (Plagiarism), கூறியது கூறல் போன்ற ஆய்வுக்கு உகந்ததல்லாத செயல்களில் ஈடுபடுவது குற்றச் செயலாகும்.
- கட்டுரையில் தாங்கள் குறிப்பிடும் கருத்துக்களுக்கு தாங்களே பொறுப்பாவீர்கள்.
- கூடுதல் விபரங்கள் அறிய, தொடர்பு கொள்ளவும் – 94424 11730, 77087 39388