Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
| Title | : சங்கத் தமிழர் வாழ்வியல் மற்றும் வரலாற்று நோக்கில் நவிரமலை |
|---|---|
| Article Information | : Volume 3 - Issue 2 November - 2019) , 22-54 |
| Affiliation(s) | : Assistant professor |
Abstract :
சங்கத் தமிழரின் வாழ்வியல் என்பது ஈராயிரம் ஆண்டுகள் பழமையினை உடையது. எட்டுத்தொகை நூல்கள் சங்கத் தமிழரின் தொடர்ச்சியான வாழ்வியலை எடுத்துரைக்கவில்லை. ஆனால் பத்துப்பாட்டு நூல்கள் ஒரு தொடர் சங்கிலியைப் போல் குறிப்பிட்ட பகுதியை அரசாண்ட மன்னன், மக்கள், வாழ்வியல் முறைமைகளை எடுத்துரைப்பதை அறிய முடிகிறது. பத்துப்பாட்டு நூல்களில் பத்தாவது இடத்தில் வைத்துப் போற்றப்படும் நூல் மலைபடுகடாம் என்னும் கூத்தராற்றுப்படை. நூலில் இடம் பெறும் அடிகளின் வழியாகப் பெயர் பெற்ற ஒரே சங்க நூல் மலைபடுகடாம். “மலைபடுகடாம் மாதிரத்து இயம்ப” – 348 என்னும் அடியால் அறியலாம். மலை+ஓசையை மையப்படுத்தி அமைந்த பெயராகும்.
| Keywords | : சங்க இலக்கியம் மற்றும் கல்வெட்டியல் |
|---|---|
| Document Type | : Research Paper |
| Publication date | : October 30, 2019 |